காதல் திருமணம் செய்த மகன்.. அம்மாவுடன் சேர்ந்து அப்பாவை போட்டுத்தள்ளிய பயங்கரம்..!

காதல் திருமணம் செய்த மகன்.. அம்மாவுடன் சேர்ந்து அப்பாவை போட்டுத்தள்ளிய பயங்கரம்..!


Perambalur Mother and Son Killed Father Who Against Love Marriage

 

மகன் திருமணம் தொடர்பான முடிவால் குடும்பத்தில் நிம்மதி கேள்விக்குறியாக, இறுதியில் தந்தையை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி மலர்கொடி. ராமகிருஷ்ணன் கடந்த ஆறு ஆண்டுகளாக தியேட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். தம்பதிகளுக்கு 24 வயதுடைய வெங்கடேசன் என்ற மகன் இருக்கிறார். 

இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறு சமூகத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் ஆனதிலிருந்து குடும்பத்தில் தகராறு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை 11 மணியளவில் மலர்கொடி மற்றும் வெங்கடேசன் சேர்ந்து ராமகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். 

Perambalur

ஒரு கட்டத்தில் வெங்கடேசன் சண்டையில் ஈடுபட்ட நிலையில், ராமகிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்ட நிலையில், ராமகிருஷ்ணனின் தாயார் நீலம்மாள் மகனின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது விஷயம் புரிந்துள்ளது. 

இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உதவியுடன் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான மலர்கொடி, வெங்கடேசன்  ஆகியோரை தேடி வருகின்றனர்.