நகை, பணத்துக்காக பல பெண்களுடன் மோசடி திருமணம்.. தமிழகமே அதிரும் பரபரப்பு சம்பவம்.. மனைவியின் தரமான செய்கை.!

நகை, பணத்துக்காக பல பெண்களுடன் மோசடி திருமணம்.. தமிழகமே அதிரும் பரபரப்பு சம்பவம்.. மனைவியின் தரமான செய்கை.!



Perambalur Man Palraj Cheated Many Girls Using Marriage Trap Stolen Money Jewels

பல பெண்களை திருமணம் செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கணவனின் விபரீதம் அறிந்த மனைவி கொடுத்த வழக்கால் மோசடி மன்னன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு, கிழுமத்தூர் கிராமத்தை சார்ந்தவர் முருகன். இவரது மகள் பூவழகி (வயது 25). பூவழகி தனது பெற்றோருடன் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகாரில், "எனக்கும் - பெண்ணக்கோணம் கிராமத்தை சார்ந்த பரமசிவம் - பச்சையம்மாள் தம்பதி மகன் பால்ராசு (வயது 25) என்பவருக்கும் கடந்த மார்ச் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது எனக்கும் - பால்ராசுக்கும் 5 சவரன் நகை, சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து எனது பெற்றோர் 10 சவரன் நகை, இருசக்கர வாகனம் வாங்க ரூ.1 இலட்சம் பணத்தை தருவதாக கூறியிருந்தனர். 

எங்களுக்கு திருமணம் முடிந்து 2 மாதமே ஆகும் நிலையில், இருவரும் பெண்ணக்கோணம் கிராமத்தில் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தோம். கணவர் வீட்டில் இருக்கையில், அவரது செல்போனில் பல பெண்களுடன் செல்பி எடுத்த புகைப்படம் இருந்தது. இதனை கணவரே எனக்கு காண்பித்தார். அவர்கள் குறித்து கேட்கையில், உன்னை திருமணம் செய்வதற்கு முன்னதாக நகை, பணத்திற்கு ஆசைப்பட்டு பல பெண்களிடம் பல்வேறு பெயரை கூறி ஏமாற்றி திருமணம் செய்து வாழ்ந்து வருகிறேன். இதுகுறித்து இனிமேல் கேட்காதே, நான் உன்னை நன்றாக பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். கணவரின் வார்த்தையை நம்பிய நானும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், பெற்றோரிடம் இருசக்கர வாகனம் வாங்க ரூ.1 இலட்சம் பணமும், 10 சவரன் நகையும் வாங்கி வா என்று கூறினார். 

Perambalur

மேலும், என்னை பெற்றோரின் இல்லத்திற்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் பெற்றோர் எனக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். நீங்கள் கேட்ட தொகையை கொடுக்க இயலாது. ரூ.50 ஆயிரம் தற்போது தருகிறோம் என்று கூறினார்கள். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பால்ராசு, ரூ.3 இலட்சம் பணம், 10 சவரன் நகை கொடுத்தால் உனது மகளுடன் குடும்பம் நடத்துகிறேன் என்று கூறி பெற்றோரின் இல்லத்திலேயே என்னை விட்டு சென்றார். பலமுறை கணவரின் எண்ணுக்கு தொடர்பு கொண்டும் பலனில்லை. ஒருகட்டத்தில் போனை எடுத்து பேசிய கணவர், சென்னையில் வேலை பார்த்து வருகிறேன். நான் கேட்டதை பெற்றோர் ஏற்பாடு செய்ததும் சொல், உன்னை வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால், அவருக்கு பின்னணியில் பெண்கள் பேசும் குரலும் கேட்டது. 

இதனால் கணவரின் மீது சந்தேகம் ஏற்படவே, இதற்கிடையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி காவல் நிலையத்தில் இருந்து வந்த அதிகாரிகள் பால்ராசை விசாரித்தனர். என்ன விஷயம் என்று கேட்கையில், சிவகங்கை மாவட்டம் கோவிலூர் கிராமத்தை சார்ந்த பிரியா என்ற மைனர் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் வந்துள்ளது என்று தெரிவித்தனர். என்னை திருமணம் செய்யும் முன்னரே பெரம்பலூர் சிறுவாச்சூர் கிராமத்தை சார்ந்த பிரதீபா என்ற பெண்ணை திருமணம் செய்து, அவர் 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் தகவலும் தெரியவந்தது. 

எனது அலைபேசி எண்ணை தெரிந்துகொண்ட பிரதீபா, எண்ணை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரியப்படுத்தினார். கணவர் பால்ராசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது குறித்தும், ஒவ்வொரு பெண்ணிடமும் பல பெயர்களை கூறி திருமணம் செய்து நகை, பணம் வாங்கி குடும்பம் நடத்திவிட்டு கைவிட்டு சென்றது தொடர்பாகவும், பல பெண்களை பால்ராசு இவ்வாறான முறையில் சீரழித்திருப்பது குறித்து கண்ணீருடன் பிரதீபா தெரிவித்தார். பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பால்ராசு, எனது வாழ்க்கையையும் சீரழித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து செய்தும் வருகிறார். நான் வாழ்வதா? சாவதா? என்று தெரியாமல் இருக்கிறேன். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார். 

Perambalur

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், அவரை தேடி வருகின்றனர். காவல்துறையினர் தேடுவதை அறிந்த பால்ராசும் அதிகாரிகளுக்கு தண்ணீர் காண்பிப்பதாக நினைத்து, வாட்ஸப்பில் மட்டும் வெவ்வேறு எண்களில் பேசி வந்த நிலையில், காவல் துறையினர் பூவழகியை வைத்து பால்ராஜை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, பூவழகியை பால்ராசின் புதிய எண் வழியாக பேச வைத்துள்ளனர்.

நான் உன்னுடன் வாழ வேண்டும், உன்னை பார்க்க ஆசைப்படுகிறேன் என்று பூவழகி வலையை விரிக்க, நீ மட்டும் தனியாக சென்னை வா. வீடு எடுத்து வாழலாம் என பால்ராசு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பூவழகியின் உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் 4 பேர் தனித்தனி வாகனத்தில் சென்னை புறப்பட்டு சென்ற நிலையில், பூவழகியை தொடர்பு கொண்ட பால்ராசு, கோயம்பேடுக்கு பேருந்து டிக்கெட் எடுக்க சொல்லி, டிக்கெட்டை தனக்கு வாட்ஸப்பில் புகைப்படம் எடுத்து அனுப்ப கூறியுள்ளார். டிக்கெட் போட்டோ அனுப்பி வைக்கப்பட்டதும், தனியாக வருகிறாரா? என உறுதி செய்ய திடீரென விழுப்புரத்தில் இறங்கச்சொல்லி, அங்கிருந்து காஞ்சிபுரத்திற்கு வரச்சொல்லியுள்ளார். 

Perambalur

பின்னர், 1 மணிநேரம் கழித்து சென்னை பேருந்து ஏறி செங்கல்பட்டுக்கு வரச்சொல்லியுள்ளார். இந்த பயணத்தின் போது ஒவ்வொரு முறையும் டிக்கெட் போட்டோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் யோசனைப்படி ஒவ்வொரு விஷயத்தையும் சமாளித்த பூவழகி, செங்கல்பட்டில் இறங்கியுள்ளார். அவரை அங்குள்ள மேம்பாலம் அருகே வரச்சொல்லி, நேராக வா, வலது பக்கம் - இடது பக்கம் என திரைப்பட பாணியில் அலைக்கழித்து, பாலத்தின் மேல்பகுதிக்கு செல்லகூறிவிட்டு கீழே இறங்க சொல்லியுள்ளார். பெண் மேலே ஏறி கீழே இறங்கிய நிலையில், காவல் துறையினர் மாற்று சீருடையில் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் பால்ராசு வந்துள்ளார். 

காவல் அதிகாரி ஒருவர் விலாசம் கேட்பது போல நடித்து, பேச்சுக்கொடுக்க தனது பெயர் பால்ராசு என்பதை உளறியுள்ளார். இதனையடுத்து, அவரை பிடிக்க முயற்சித்த போது தப்பி ஓடிய நிலையில், சம்பவ இடத்தில் இருந்த பெரம்பலூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா சுதாரித்துக்கொண்டு, பொதுமக்களிடம் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடுகிறான்., பிடியுங்கள் என்று கூறியுள்ளார். உடனடியாக செயல்பட்ட பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பால்ராசை விரட்டிப்பிடித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் செங்கல்பட்டு மேம்பால பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதன்பின்னர், பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பால்ராசுவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், ப்ரதீபாவை தனது தங்கை என்று தெரிவித்து சமாளித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.