அதிமுக கொடிக்கம்பம் திட்டமிட்டு எரிப்பு.. பெரம்பலூர் அருகே கொந்தளிப்பில் அதிமுகவினர்.!Perambalur Kunnam Near Paravai Village AIADMK Party Flag Burned by Strangers

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பரவாய் கிராமத்தின் பேருந்து நிறுத்தம் அருகே, மழவராயநல்லூர் செல்லும் பிரிவு சாலையில் அதிமுக கொடிக்கம்பம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொடிக்கம்பக்கத்தின் பக்கவாட்டு டைல்ஸ் கற்கள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன. 

Perambalur

இந்த விஷயம் தொடர்பாக குன்னம் காவல் நிலையத்தில் கட்சியின் நிர்வாகிகள் புகார் அளித்திருந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் கொடிக்கம்ப மேடையில் மதுபானம் அருந்திய மர்ம நபர்கள், காலி பாட்டிலை அங்கேயே உடைத்துள்ளனர். மேலும், அதிமுக கொடிக்கம்ப கயிற்றை அறுத்து, கொடியை தீவைத்து எரித்து இருக்கின்றனர்.

Perambalur

இன்று காலை நேரத்தில் அப்பகுதி வழியே சென்ற அதிமுகவினர், கொடி எரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த செய்தி அதிமுகவினரிடையே பரவி, அவர்கள் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக பரவாய் கிளை செயலாளர் வேல்முருகன் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.