தமிழகத்தில் கொரோனோவால் மேலும் ஒருவர் மரணம்! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனோவால் மேலும் ஒருவர் மரணம்! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!


people-dead-by-coronovirus-in-tamilnadu

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 190 க்கு மேற்பட்ட உலகநாடுகளில்  அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் இதுவரையில் 2500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். 

 இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

tamilnadu

மேலும் தமிழகத்தில் இன்று  50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதாவது கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது