ஆட்சிக்கு வர எல்லோரும் அரசியல் செய்வாங்க.! ஆனால் நீங்கள் வேற லெவல் சார்.! மு.க ஸ்டாலினை புகழ்ந்த பவன் கல்யாண்.!

ஆட்சிக்கு வர எல்லோரும் அரசியல் செய்வாங்க.! ஆனால் நீங்கள் வேற லெவல் சார்.! மு.க ஸ்டாலினை புகழ்ந்த பவன் கல்யாண்.!


Pawan kalyan talk about mk stalin

தமிழக முதலமைச்சராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், கொரோனா நிவாரண தொகை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி, வீடு தேடி வந்து மருத்துவம் பார்க்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஜனசேனா தலைவரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பவன் கல்யாண் தனது டுவிட்டர் பதிவில், ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அன்ப்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்பாடுகளால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது.

உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.  ஜனசேனா தலைவரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் வெளியிட்ட அந்த அறிக்கை தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும்  வெளியாகியுள்ளது.