தமிழகம்

இறந்து 12 மணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் தள்ளுவண்டியில் பாட்டியின் சடலத்தை எடுத்து சென்ற பேரன்.. நெஞ்சை உருக்கும் துயர சம்பவம்.!

Summary:

Pattiyin udalai thallu vandiyil eaduthu sinra peran

தேனியின் கூடலூர் 14வது வார்டை சேர்ந்தவர் ஒரு வயதான மூதாட்டி. இவர் தொடர் வயிற்று போக்கால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனை அடுத்து அந்த பாட்டியின் பேரன் பாட்டியை அழைத்து கொண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பாட்டிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த பாட்டிக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து வீட்டிலேயே பாட்டியை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாட்டி உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து பாட்டி, இறந்த தகவலை கூடலூர் நகராட்சியின் சுகாதார பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டது, அவர்கள் உடனடியாக ஆம்புலன்சை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர்.ஆனால் 12 மணிநேரம் கடந்தும் ஆம்புலன்ஸ் வராததால் தள்ளுவண்டியில் பாட்டியின் சடலத்தை வைத்து சுடுகாடு வரை கொண்டு சென்றுள்ளார் அவரது பேரன்.

அப்புகைப்படங்கள் வெளியானதால் பொதுமக்கள் நகராட்சியின் அலட்சிய போக்கை கண்டித்து வருகின்றனர்.

 


Advertisement