சாதி சர்ச்சையில் சிக்கிய பட்டிமன்றம் ராஜா.. அனல்பறக்கும் விவாதங்கள்.!



pattimandram-raja-caste-controversy-sparks-heated-debat

உணவு பரிமாறிய பெண்ணிடம் சாதியை கேட்டதாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

உணவு பரிமாறினார்:

Karthikeyan Fastura: பட்டிமன்றங்களில் நடுவராகவும், பேச்சாளராகவும் பங்கேற்று தமிழக மக்களிடம் நீங்காத இடத்தை பிடித்தவர் ராஜா. இவரின் பட்டிமன்ற பேச்சுக்களை கேட்டு வயிறு குலுங்க சிரித்தவர்களும், சிந்தித்தவர்களும் ஏராளம் என்றும் கூறலாம். சமீபத்தில் ராஜா அமெரிக்கா சென்றதாக தெரியவருகிறது. அப்போது, அமெரிக்கா வாழ் தமிழர் ஒருவர் தாமாக முன்வந்து ராஜாவுக்கு சாப்பிட உணவு சமைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: Bigg Boss Diwakar: பிக் பாஸ் திவாகர் மீது பகீர் குற்றசாட்டுகள்.. இதெல்லாம் என்ன கோபால்? ஷாக் மொமண்ட்.!

சாதியை கேட்டார்:

இந்த உணவின் சுவை செட்டிநாடு சுவையின் அடிப்படையில் இருக்கவே, ராஜாவும் செட்டிநாடா? என கேள்வி எழுப்பி சாதியை கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ராஜா சாதியை கேட்டதாக கூறி, பெண்ணின் சகோதரர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவு மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக, ராஜா சாதியை கேட்டாரா? என்ற கேள்வி விவாதத்தை உருவாக்கியது. அதனைத்தொடர்ந்து, ராஜா இன்று காலை தனது விளக்கம் ஒன்றை வீடியோவாக வெளியிட்டு இருந்தார். 

ராஜா விளக்கம் கொடுத்த வீடியோ:

குவியும் ஆதரவும்-கண்டனமும்:

அந்த வீடியோவையும் ஏற்றுக்கொள்ளாத நபர், தனது தங்கைக்கு நடந்தது உண்மை. அவர் சாதி ரீதியாக இழிவுபடுத்தப்பட்டார் அல்லது அது தொடர்பான அழுத்தத்தை எதிர்கொண்டார் என்ற விஷயத்தில் உறுதியாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இதனால் ராஜாவின் மீது ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. 

சர்ச்சையில் சிக்கிய சோகம்:

ராஜாவுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் பலரும் இளைஞரின் குற்றச்சாட்டை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், உணவின் சுவைக்காக செட்டிநாடா? என கேட்டது குற்றம் எனில், செட்டிநாட்டில் என்ன சமூகம் வாழ்கிறது என கணக்கெடுத்தால் என்ன சொல்வது? செட்டிநாட்டு சுவை பொதுவாகிவிட்ட நிலையில், அதனை எப்படி இவ்வாறான அழுத்தத்துடன் ஒப்பிடுவது எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், ராஜாவை வேறொரு பின்புலத்துடன் ஒருசிலர் அடையாளப்படுத்தியும் பேசி வருகின்றனர். Pattimandram Raja

ராஜா மீதான சர்ச்சை குறித்து புளூசட்டை மாறன் பதிவு:

ராஜாவுக்கு ஆதரவு கருத்து:

ராஜா மீதான குற்றசாட்டு குறித்த பதிவு:

 

கடல்கடந்து சென்றாலும், உள்ளூர்க்குள் நண்டு வாழ்க்கை வாழ்ந்தாலும், யாராக இருந்தாலும், ஒருசில இடங்களில் சாதி பார்த்து தான் உதவிகள் கிடைக்கிறது என்பது தான் அப்பட்டமான வருத்தத்துக்குரிய உண்மை. 

இதையும் படிங்க: Emotional Video: முதல் முதலாக சொந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த பெற்றோர்.. இந்த சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்லை..!