நீட்டிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு வயது.! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!part-time-teachers-retirement-age-increasedas-60

பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 2012 ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் பல காரணங்களால் ஏராளமானோர் பணி விலகியதை தொடர்ந்து தற்போது 12000 பேர் அரசு பள்ளிகளில் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர் .

அவர்கள் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி அறிவியல் போன்ற வகுப்புகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 என உயர்த்தப்பட்ட நிலையில் பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 60 ஆக்கவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்தது.  

பகுதிநேர ஆசிரியர்கள் ஓய்வு வயது இதுவரை 58 ஆக இருந்த நிலையில் அந்த கோரிக்கையை ஏற்ற அரசு பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இந்தர நிலையில் தற்போது அந்த உத்தரவு நடப்பு செப்டம்பர் முதல் அமலுக்கு வருவதாக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.