தமிழகம்

மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத தந்தை! குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம்!

Summary:

parents suicide for school fees

நாகப்பட்டினத்தில் வெளிப்பாளையம் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நகைக்கடை தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.  இவருக்கும் லட்சுமி என்கிற பெண்ணுக்கும் திருமணம் ஆன நிலையில் ஜெகதீஸ்வரன் என்ற 11 வயது நிரம்பிய மகன் இருந்துள்ளான்.

ஜெகதீஸ்வரன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்துவந்துள்ளான். இந்தநிலையில் சிறுவனுக்கு பள்ளி ஆரம்பித்து 10 நாட்களாகியும் பள்ளி கட்டணம் செலுத்தாததால் ஜெகதீஸ்வரன் தினமும் தன்னுடைய பெற்றோரிடம் பணம் கேட்டு வந்துள்ளான்.

செந்தில்குமாருக்கு நகைக்கடையில் போதிய வருமானம் இல்லாத காரணத்தால், குடும்ப செலவிற்காக பலரிடமும் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் செந்தில்குமார் மனவேதனை அடைந்துள்ளார். படித்து காவல்துறையில் போலீஸ் ஆக வேண்டும் என்கிற மகனின் ஆசையை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளோமே என மனைவியிடம் புலம்பியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் செந்தில்குமார் வேலைக்கு வராத காரணத்தால் கடையின் உரிமையாளர் ஒரு சிறுவனை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் செந்தில்குமார் வீட்டில் மூன்று பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டு கிடந்துள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவன் கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளான்.

பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத காரணத்தால் கடைசி நேரத்தில் போலீஸ் உடை அணிவித்து மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்
 


Advertisement