காதல் ஜோடி செய்த செயலால் பறிப் போன இரண்டு உயிர்!! சோகத்தில் மூழ்கிய அப்பகுதி மக்கள்!!

காதல் ஜோடி செய்த செயலால் பறிப் போன இரண்டு உயிர்!! சோகத்தில் மூழ்கிய அப்பகுதி மக்கள்!!


parents-sucide

மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த பெற்றோர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மாம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் தாமரைசெல்வன் (வயது 60), மனைவி சரளா (வயது55). இந்த தம்பதியினருக்கு  அர்ச்சனா (வயது 28)என்ற ஒரு பெண் உள்ளார். அர்ச்சனா  செங்குன்றம் அருகே  உள்ள தனியார் மருத்துவமனயில் பல் மருத்துவராக வேலை செய்து வருகிறார்.

இவர், சமீபத்தில் பெரியபாளையம் அருகே உள்ள கிராமத்தில், ஏற்கனவே இரண்டு திருமணம் செய்த 35 வயதான வாலிபரை காதலித்து, வீட்டிற்க்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

இதனையறிந்த, பெண் வீட்டாரான தாமரைசெல்வன் மற்றும் சரளா ஆகிய இருவரும்  தன் மகள் இப்படி செய்து விட்டாலே என்ற மனவேதனையுடன் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.  இச்சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.