எங்களால முடியல..பெத்த மகனை துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொன்ற பெற்றோர்.! போலீஸிடம் கூறிய பகீர் காரணம்!!

எங்களால முடியல..பெத்த மகனை துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொன்ற பெற்றோர்.! போலீஸிடம் கூறிய பகீர் காரணம்!!


parents-killed-son-in-madurai

மதுரை சொக்கலிங்க நகர் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் 56 வயது நிறைந்த நாகராஜன். இவரது மனைவி குருவம்மாள். இவர்கள் இருவரும் அதே பகுதியில் தங்களது வீட்டிற்கு அருகே வடை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவர்களில் இளைய மகன் மாரி செல்வம் பாலிடெக்னிக் படித்து வந்த நிலையில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் வீட்டில் வைத்திருந்த பணத்தை எடுத்து குடித்து வந்துள்ளார். பெற்றோரிடம் அடிக்கடி தகராறும் செய்து வந்துள்ளார்.

Murder

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மிகவும் லேட்டாக குடிபோதையுடன் மாரிச்செல்வம் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும் அவரை கண்டித்த தாய் மற்றும் தந்தை இருவரையும் கீழே தள்ளியுள்ளார். இந்த நிலையில் நாள்தோறும் மகன் செய்யும் தொந்தரவுகளை தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த அவர்கள் வீட்டில் கிடந்த கயிற்றை எடுத்து குடிபோதையில் கிடந்த மாரிச்செல்வத்தின் கழுத்தை  இறுக்கி கொலை செய்துள்ளனர். 

பின்னர் இருவருமே காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றைக் கூறி சரண் அடைந்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாரி செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நாகராஜன் மற்றும் குருவம்மாள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.