தமிழகம் காதல் – உறவுகள்

திருமணமான அடுத்த சிலநொடிகளிலேயே புதுமண ஜோடிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! கண்ணீர்விட்டு கதறும் கணவர்!

Summary:

Parents kidnapped love married daughter

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருபவர் மெய்யப்பன். இவர் சரளை சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ஜீவிதா என்ற கல்லூரி மாணவியை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 

 மேலும் இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், தீவிர எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் தொடர்ந்து காதல் ஜோடிகள் எவ்வளவோ வற்புறுத்தி வந்தும், பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். 

தகவலறிந்து அங்கு சென்ற பெண்ணின் குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள் இருவரையும் கடுமையாக தாக்கிவிட்டு ஜீவிதாவை கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.  மேலும் இதனை சற்றும் எதிர்பாராத மெய்யப்பன் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றுள்ளார். 

அதனைத் தொடர்ந்து தனது மனைவியை மீட்டுத் தருமாறு கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார்கள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Advertisement