அரசியல் தமிழகம்

சமபந்தி விருந்தில் கலந்துகொண்ட முதல்வர் மற்றும் துணை முதல்வர்!!

Summary:

palanisamy and OPS participated in anna memorial function

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 313 இடங்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து அதிமுக சார்பில் நடைபெற்றது. அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்துகொண்டார்.

அண்ணாவின் 50- ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் பல  கோயில்களில் சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும் நடைபெற்றது. சென்னையில் 34 கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெற்றது. 

சென்னை கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு சமபந்தி விருந்தில் பங்கேற்று உணவு எடுத்துக் கொண்டார். 

அதேபோல் சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.


Advertisement