பழனியில் பரிதாபம் பிள்ளையை காப்பாற்ற முயன்ற தாயும் பலியான உருக்கமான சம்பவம்.!palani-elephany-dead-with-child

தாய், பிள்ளை உறவு என்றால் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்ற வகையில், 200 அடி பள்ளத்தில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற முயன்ற தாய் யானையும் பரிதாபமாக உயிரிழந்தது. இதனை காண்போரின் மனதை உருக்கும் படி இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பரந்துவிரிந்த அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் சிங்கம், வரிப்புலி, சிறுத்தை யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன. அங்கு காட்டுக்கெட்டான் என்ற பகுதியில் 200 அடி பள்ளத்திள் 3 வயது குட்டியானை ஒன்று விழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் யானையானது தனது குட்டியை காப்பாற்ற முயன்றுள்ளது. 

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த யானையும் சறுக்கி பள்ளத்தில் இருந்த பெரும்பாறையில் விழுந்து பலத்த அடிபட்டு உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் அந்த வழியாக வந்த வன விலங்குகள் யானைகளை சேதப்படுத்தி உள்ளன. இச்சம்பவத்தை கண்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதன்பிறகு வனத்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்படி, இறந்த 2 யானைகளையும், பிரேத பரிசோதனை செய்த கால்நடை மருத்துவ குழுவினர் குட்டி யானை மற்றும் பெண் யானை இரண்டையும் அங்கேயே புதைத்துள்ளனர்.