எருது விடும் நிகழ்ச்சி.. ஒருவர் உயிரிழந்ததாக கூறி கலவரம்... போலீசார் கைது விசாரணை..!

எருது விடும் நிகழ்ச்சி.. ஒருவர் உயிரிழந்ததாக கூறி கலவரம்... போலீசார் கைது விசாரணை..!



Ox-killing event.. Riot due to the death of one person... Police arrested and investigated..!

திருப்பத்தூர் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் அங்குள்ளவர்கள் காவல்துறை வாகனங்கள் மீது கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே கல்நார்சாம்பட்டியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே எருது விடும் விழாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட  நேரத்தை தாண்டியும் எருது விடும் விழா நடைபெற்றதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

Ox killing event

அப்போது அந்த நேரத்தில் சீறி பாய்ந்து வந்த எருது ஒன்று முஷாரப் என்ற இளைஞரை முட்டி சாய்த்து விட்டு ஓடியது. இதில் முஷாரப் படுகாயம் அடைந்து கீழே விழுந்துள்ளார். ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் முஷாரப் போலீசார் தடியடி நடத்தி தாக்கியதால்தான் இறந்து விட்டதாக கூறி கலவரத்தில் ஈடுபட்டு அங்கிருந்து அரசு அதிகாரிகளின் வாகனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காவல்துறையின் வாகனங்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறி 39 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.