இனி ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் வாங்கலாம்! வெளியான புது அறிவிப்பு!

இனி ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் வாங்கலாம்! வெளியான புது அறிவிப்பு!


Order petrol and diesel in online by indian oil corporation

மக்களுக்கு நாளுக்கு நாள் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது இந்த பெட்ரோல், டீசல். கார் அல்லது பைக் இல்லாதா வீடுகளே என்னும் அளவிற்கு அணைத்து வீடுகளிலும் மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுவரை வீட்டுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் ஆன்லைனில் கிடைத்தது போல தற்போது பெட்ரோல், டீசல் இணையத்தில் கிடைக்க வழிசெய்துள்ளது இந்தியன் ஆயில் நிறுவனம்.

நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் ஆன்லைனில் டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளையடுத்து ஆன்லைனில் டீசல் விற்பனை செய்வது என்று மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த வகையில் நாட்டிலேயே முதன் முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை சென்னையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

petrol diesel

கொளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் டீசல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து டெலிவரி செய்வதற்கு எந்தவித கூடுதல் கட்டணம், வசூலிக்கப்படாது என்பது கூடுதல் தகவல். REPOSE APP என்ற செயலி மூலம் டீசலை ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

petrol diesel