
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை தாசில்தார்.. பறக்கும்படையில் கொடூரம்.!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்திலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஊட்டி ஆட்சியர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வரும் பாபு (வயது 35) என்பவரின் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை நேரத்தில் பாபு தனது தலைமையிலான 4 அதிகாரிகளுடன் வாகன சோதனைக்கு சென்ற நிலையில், இவர்களுடன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலரும் பணிக்கு சென்றுள்ளார். வாகன சோதனை நிறைவு பெற்றதும் பெண் காவலர் வாகனத்தில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு இருந்த நிலையில், ஜீப்பில் ஏறிய பாபு பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர், தாசில்தார் பாபுவை கண்டித்து சத்தமிட்டு, இதுகுறித்து ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தாசில்தார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனையடுத்து, துணை தாசில்தார் பாபுவின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement