
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளநிலையில் தமிழக அரசின் அவசரச்சட்டம் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளநிலையில் தமிழக அரசின் அவசரச்சட்டம் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மி மூலம் ஏற்பட்ட பல்வேறு தற்கொலை சம்பவங்களை அடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கவேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு கடந்த வாரம் தடைவிதித்தது.
இந்த அவசர அவசரச்சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கினார். ஆளுநர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இந்த சட்டம் தொடர்பாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த தகவலில், "தமிழகத்தில் இனி எங்கு ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்றாலும், சென்னை சிட்டி போலீஸ் சட்டத்திற்கு பதில் தமிழ்நாடு விளையாட்டு தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், டிஎஸ்பி பதவிக்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே விசாரணை நடத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கணினி அல்லது செல்போனில் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை விளையாடினால் குற்றம் என்றும் கூறப்பட்டுள்ளது."
அதுமட்டும் இல்லாமல் சட்டத்தை மீறி விளையாடுபவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement