ஊரடங்கிலும் ஓயாத 85 வயது பாட்டியின் ஒரு ரூபாய் இட்லி சேவை! வயிறார வாழ்த்தும் புலம் பெயர் தொழிலாளர்கள்!

நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கும் சமயத்திலும் கோயம்புத்தூரில் வழக்கம் போல ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் 85 வயது பாட்டியல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 85 வயது பாட்டில் கமலாத்தாள். இவர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு அந்த பகுதியில் 'இட்லி அம்மா' என்ற அடைமொழி பெயரும் உள்ளது.
ஒவ்வொரு கடையிலும் இட்லியின் விலை தாறுமாறாக எகிறிய போதிலும் கமலாத்தாள் கடையில் இட்லியின் விலை வெறும் ஒரு ரூபாய் தான். தற்போது இக்கட்டான இந்த ஊரடங்கு சமயத்திலும் கமலாத்தாள் இட்லியின் விலையை ஏற்றவில்லை.
இதனால் வேலை இல்லாமல் தவித்து வரும் பல வெளிமாநில புலம் பெயர் தொழிலாளர்கள் பயன்பெறுவதாக கமலாத்தாள் கூறியுள்ளார். தற்போது புலம் பெயர் தொழிலாளர்கள் தனக்கு உதவியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இட்லி அம்மாவின் சேவையை உணர்ந்து ஒரு சிலர் அவருக்கு தேவையான பொருட்களையும் வாங்கி கொடுத்துள்ளனர்.