அடக்கடவுளே!! வாந்தி எடுத்து மயங்கிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கதறும் குடும்பத்தினர்..!

அடக்கடவுளே!! வாந்தி எடுத்து மயங்கிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கதறும் குடும்பத்தினர்..!Oh my god!! The shock that awaited the young man who fainted after vomiting.. The screaming family..!

ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் மோகன்ராஜ்- ராதாமணி தம்பதியினர். இவர்களுக்கு ஆனந்த் என்ற ஒரு மகன் உள்ளார். ஆனந்த் குடிக்கு அடிமையாகி விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆனந்த் மது குடித்துவிட்டு போதையில்  நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அதிக மது குடித்ததன் காரணமாக வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு பதறிப்போன ஆனந்தின் தாய் ராதாமணி கூச்சலிட்டவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆனந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

young man died

இதனையடுத்து ஆனந்திற்க்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஆனந்த் மதுவில் விஷம் கலந்து தற்கொலைக்கு முயன்றாரா? இல்லை யாரேனும் மதுவில் விஷம் கலந்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.