சென்னையில் காற்றில் பறந்த சமூக இடைவெளி! திடீர் போராட்டத்தில் குதித்த வடமாநில தொழிலாளர்கள்!

சென்னையில் காற்றில் பறந்த சமூக இடைவெளி! திடீர் போராட்டத்தில் குதித்த வடமாநில தொழிலாளர்கள்!



North workers strike at chennai to allow home

சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்த வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதி அளிக்க வேண்டும் என திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 40 நாட்களாக வேலை, சம்பளம் இல்லாமல் வடமாநில தொழிலாளர்கள் சென்னையின் பல பகுதிகளில் தங்கியுள்ளனர்.


இந்நிலையில் இன்று சென்னையில் பல்லாவரம், முகப்பேர், வேளச்சேரி, கிண்டி போன்ற இடங்களில் கூட்டமாக கூடி தங்களை நடந்தாவது எங்கள் ஊருக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் ஒரு குழுவினர் சென்னை ரிப்பன் பில்டிங்கிற்கு முன்னர் முற்றுகையிட முயன்றுள்ளனர். பின்னர் போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.