இனி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் இல்லையா..? பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு.!

இனி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் இல்லையா..? பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு.!


no-home-work-for-fiest-and-second-std-students

1,2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. அதில், 1 மற்றும் 2-ம் வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும்படையினர் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவல்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆய்வுக்கு பிறகு வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.