நிவர் புயல் கடந்துவிட்டது என நினைக்கவேண்டாம்.. மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..

நிவர் புயல் கடந்துவிட்டது என நினைக்கவேண்டாம்.. மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..



Nivar cyclone latest update and Government announcements

நிவர் புயல் கரையை கடந்துவிட்டது என அதிகாரபூர்வ அறிவிப் வரும்வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று இரவு தீவிர புயலாக வலுப்பெறுகிறது. இந்த புயலுக்கு நிவர் புயல் என பேரிடப்பட்டுள்ளது. மேலும் நிவர் புயல் நாளை பிற்பகலில், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், குறிப்பாக டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், புயல் கரையை கடக்கும்போது 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Nivar Cyclone

அதேநேரம் இந்த வலுவான புயல் மற்றும் கனமழை ஆகியவரை சமாளிக்க அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புயல் கரையை கடக்கும் போது திடீரென காற்றின் வேகம் குறையும். அதனால் புயல் கடந்துவிட்டதாக நினைத்து மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும், புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் தங்கள் வீடுகளிலையே பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் நிவர் புயல் குறித்து பதற்றமடைய வேண்டாம் என்றும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.