தயாராக இருங்கள்.. நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது நிவர் புயல்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தயாராக இருங்கள்.. நாளை காலை அதி தீவிர புயலாக மாறுகிறது நிவர் புயல்... சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



nivar-cyclone-becomes-more-strong-tomorrow-morning

நிவர் புயல் நாளை காலை அதி தீவிர புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி அதற்கடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுவடையும்.

தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர்  தொலைவிலும், சென்னைக்கு 420 கிலோ மீட்டர்  தொலைவிலும் உள்ள நிவர் புயல் தற்போது வடக்கு - வடமேற்கு நோக்கி நகரும் நிலையில் அதன்பின் வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nivar Cyclone

புயல் நகரும் வேகம் தாமதமாவதால் திசை மாறி செல்ல வாய்ப்பு இல்லை எனவும், ஒருவேளை இயற்கையின் சூழலால் திசை மாறி செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

புயல் கரையை கடக்கும்போது காரைக்கால், நாகை, கடலூர், புதுவை, மயிலாடுதுறை மற்றும் செங்கல்ப்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலோ,  சில நேரங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்திலோ காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.