10 லட்சம் நிவாரண நிதி.. நிவர் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அறிவிப்பு..

10 லட்சம் நிவாரண நிதி.. நிவர் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி அறிவிப்பு..



nivar-cyclone-10-lakhs-fund-for-deceased-family-in-tn

நிவர் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி நேரு முன்தினம் பாண்டிச்சேரி அருகே கரையை கடந்தது. நிவர் புயல் கரையை கடக்க இருப்பதாக வெளியான தகவலை அடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து.

வரலாறு காணாத அளவிற்கு தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. ஆனாலும் கடும் புயல் மற்றும் மழை காரணமாக ஒருசில இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை நிவர் புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

Niver puyal

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணநிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய தகவலில், "இது வரை 4 பேர் நிவர் புயலால் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிப்பதோடு, அவர்களின் குடும்பத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் 4 லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 6 லட்சம் ரூபாயும், மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.