தமிழகம்

புயல் முடிந்த கையோடு இதனை செய்யுங்கள்.. நெட்டிசன் வைத்த கோரிக்கைக்கு உடனே ஓகே சொன்ன தமிழக முதல்வர்..

Summary:

தமிழக முதல்வருக்கு நெட்டிசன் ஒருவர் வைத்த கோரிக்கைக்கு தமிழக முதல்வர் உடனே பதிலளித்துள்ளார்.

தமிழக முதல்வருக்கு நெட்டிசன் ஒருவர் வைத்த கோரிக்கைக்கு தமிழக முதல்வர் உடனே பதிலளித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தற்போது அதிதீவிர புயலாக மாறி கரையை நெருங்கி வருகிறது. மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்துவரும் இந்த புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, கடலூர் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் இருள் சூழ்ந்து கனமழை பெய்துவருகிறது.

இதனிடையே தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றால் சாலைகளில் தற்போதே பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளதை அடுத்து மீட்பு பணிகளும் தொடர்ந்து நடந்துவருகிறது.

இந்நிலையில் புயல் ஓய்ந்ததும், புயலால் சாய்ந்து விழுந்த மரங்களுக்கு பதிலாக அந்த இடத்தில் புதிய மரக்கன்றுகளை உடனே நடவேண்டும் என நெட்டிசன் ஒருவர் தமிழக முதல்வருக்கு டிவிட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கையை பார்த்த முதல்வர், "கண்டிப்பாக தம்பி" என உடனே பதிலளித்துள்ளார்...


Advertisement