இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் வந்து விடுவார்... மணப்பெண் எடுத்த அதிரடி முடிவால் ஏற்பட்ட பரபரப்பு.!

இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் வந்து விடுவார்... மணப்பெண் எடுத்த அதிரடி முடிவால் ஏற்பட்ட பரபரப்பு.!


nilgiris-girl-stopped-the-marriage-by-lying-sudden-twist

நீலகிரி மாவட்டம் மட்டகண்டி பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், தூனேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடைப்பெற அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதன்படி மணமக்கள் இருவரும் மணகோலத்தில் மணமேடையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது படுகர் இன வழக்குப்படி மணமகளிடம் மூன்று முறை திருமணத்திற்கு சம்மதமா என தாலிகட்டுவதற்கு முன் கேட்கப்படுவது வழக்கம். அதேபோல் பிரியதர்ஷினியிடம் கேட்கப்பட்ட போது இரண்டு முறை மௌனம் காத்தார். 

Nilgiri

பின் பிரியதர்ஷினியிடம் மூன்றாவது முறை கேட்கப்பட்ட போது எனக்கு இத்திருமணத்தில் சம்மதம் இல்லை என்று கூறிவிட்டு,தான் மனதார வேறு ஒருவரை விரும்புவதாகவும், அவர் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விட்டுவார் என கூறி மணமேடையிலிருந்து எழுந்தார். 

அதன்பின் மணப்பெண்ணை அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றியதாகவும், அவர் காதலனை தேடி சென்னைக்கு புறப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், தான் எங்கும் செல்லவில்லை, தனது பெற்றோருடன் அவர்கள் வீட்டிலேயே இருப்பதாக அப்பெண் விளக்கம் அளித்து ஆடியோ ஒன்றை தற்போது  வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞர் மீது பல்வேறு மோசமான தகவல்கள் கிடைத்ததாகவும், அதன் காரணமாகவே பொய் கூறி, டிராமா செய்து திருமணத்தை நிறுத்தியதாகவும் பிரியதர்ஷினி கூறியுள்ளார். மேலும் தான் பெற்றோருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.