திடீரென விவசாய நிலத்தில் தோன்றிய 10 அடி பள்ளம்.. விவசாயிகள் பேரதிர்ச்சி.!

திடீரென விவசாய நிலத்தில் தோன்றிய 10 அடி பள்ளம்.. விவசாயிகள் பேரதிர்ச்சி.!


Nilgiris Coonoor Farmer Land 10 Feet Groove

விவசாய நிலத்தில் திடீரென 10 அடி பள்ளம் உருவாகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் கேத்தி பாலாடா பகுதியில், மலையக காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீருக்காக கேத்தி பாலாடா பகுதியில் அதிகளவில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அங்குள்ள பேருந்து நிலையம் அருகில் கண்ணபிரான் என்பவரின் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு உள்ள நிலையில், இந்த இடத்திற்கு அருகே 10 அடி வரை பூமி உள்வாங்கியுள்ளது. 

இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி, கேத்தி பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.