புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
ஆசையாக வாங்கி சாப்பிட்ட பிரியாணியில் எமனாக இருந்த பூரான்.. 4 பேர் கவலைக்கிடம்.!
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் எம்.பாலடா அருகே உள்ள நரிகுழியாடா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் அங்கிருக்கும் மம்மி மெஸ் உணவகத்தில் 4 பிரியாணி வாங்கியுள்ளார். அதனை கிருஷ்ணசாமி மற்றும் அவருடன் வேலை பார்க்கும் நபர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் தியாகராஜன் என்பவர் சாப்பிட்டு கொண்டிருந்த பிரியாணியின் அடிப்பகுதியில் பூரான் இறந்துகிடப்பதை கண்ட அதிர்ச்சியடைந்தவர்கள் என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்துள்ளனர். இதனிடையே பிரியாணி சாப்பிட்ட நால்வருக்கும் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், உணவக நிர்வாகத்தினருக்கு இதுகுறித்த தகவல் தெரிவித்தும் அவர்கள் சரிவர பதில் தெரிவிக்கவில்லை. இதனை அடுத்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரி தலைமையிலான ஆய்வாளர்கள் ஹோட்டலுக்கு சென்று சோதனை செய்தபோது சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்களை தயாரித்தது தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.