அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
திருமணமான 2 நாளில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பத்தினர்!
சேலம் அருகே திருமணமான 2 நாளில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் முத்து. இவர் வெள்ளி கொலுசு பட்டறை வைத்து வேலை செய்து வருகிறார். இவருக்கும் 19 வயதான அனிதா என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த கொண்டலாம்பட்டி போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், அனிதாவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. திருமணமான புது மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.