தமிழகம்

கணவனின் சடலத்தை பார்த்து கதறி அழுத புதுப்பெண் மற்றும் குடும்பத்தினர்! சம்பவ இடத்துக்கு வந்து துப்பு துலக்கிய மோப்ப நாய்!

Summary:

newly married man mudered in arokkonam

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே உள்ள கீழ் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த பாரதிதாசன், வாலாஜாபாத் அருகே படாளம் என்ற கிராமத்தில் கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திருமணமாகி இருவரும் படாளம் கிராமத்தில் வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று பாரதிதாசன் அவரது மனைவியை பைக்கில் அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு பைக்கில் சென்ற பாரதிதாசன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள ரைஸ் மில் வளாகத்தில் பாரதிதாசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பாரதிதாசன் உடலை பார்த்து  கதறி அழுதனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கியது. இதனையடுத்து பாரதிதாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.

நேற்று இரவு பாரதிதாசன் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசாருக்கு  சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது நண்பர்களில் ஒருவரான சதீஸ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவருக்கு மதுபோதை தெளியாததால் இருந்துள்ளார். இதனால் மேலும் மற்ற 2 பேர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


Advertisement