மதுவால் வந்த வினை.! குடிபோதையில் ரகளை செய்தவர்களை தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை பரிதாப பலி.!

மதுவால் வந்த வினை.! குடிபோதையில் ரகளை செய்தவர்களை தட்டிக்கேட்ட புதுமாப்பிள்ளை பரிதாப பலி.!


newly-married-husband-died-in-pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஆலங்குடி ஊரணிக்கரை அருகே நேற்று முன்தினம் மாலை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான டீக்கடை அருகே சிலர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இந்தநிலையில், டீக்கடைக்காரர் ராஜேந்திரன், சண்டை போடாதீர்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்புங்கள் என்று கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த கருப்பையா, ராஜேந்திரனை தாக்கியுள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த அலங்குடியை சேர்ந்த வினோத்குமார் கருப்பையாவை தட்டிக்கேட்டார். அப்போது வினோத்குமாருக்கும், கருப்பையாவிற்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

young man diedஇதனையடுத்து அங்கிருந்து புறப்பட்ட கருப்பையா அவரது உறவினர்களை அழைத்துக்கொண்டு ஆலங்குடிக்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த வினோத்குமார் மற்றும் அவரது அண்ணன் பூவிழியரசன் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து பலத்த காயமடைந்த வினோத்குமார் மற்றும் பூவிழியரசன் ஆகிய இருவரையும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த வினோத்குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வினோத்குமாருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. புதுமாப்பிள்ளை வினோத்குமாரை கொலை செய்ததாக கருப்பையா உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.