தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
திருமணமான 22 நாளிலேயே புதுமாப்பிளைக்கு நேர்ந்த பரிதாபம்! கதறும் குடும்பத்தார்கள்! வெளியான துயர பின்னணி!
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்தவர் பிரபாகரன். 24 வயது நிறைந்த இவருக்கு கடந்த மாதம் 28ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபாகரனுக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். மேலும் இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் பிரபாகரனுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு, அவர் கடுமையான மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்ததால் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருமணமான 22 நாளிலேயே புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.