தனது மனைவியின் வருகைக்காக காத்துகிடந்த புதுமாப்பிளை! போன் செய்தபோது காத்திருந்த பேரிடி! கண்கலங்க வைக்கும் சம்பவம்!

தனது மனைவியின் வருகைக்காக காத்துகிடந்த புதுமாப்பிளை! போன் செய்தபோது காத்திருந்த பேரிடி! கண்கலங்க வைக்கும் சம்பவம்!


new-married-girl-dead-in-avinasi-accident

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஸ்னிஜோ ஜோஸ். இவரது மனைவி அனு. இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும்   சமீபத்தில் தான் இருவரும் டெல்லி மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஜாலியாக தேனிலவு கொண்டாடிவிட்டு திரும்பியுள்ளனர். அனு பெங்களூரில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் கத்தாரில் பணிபுரியும் தனது கணவனை ஊருக்கு வழியனுபவதற்காக திருச்சூருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்னிஜோ தமது மனைவி அனுவின் வருகைக்காக வெகுநேரமாக பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்துள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் பேருந்து வரவில்லை. மேலும் அவரது மனைவி அனுவிடமிருந்தும் எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் ஸ்னிஜோ அனுவின்  மொபைலுக்கு அழைத்துள்ளார். ஆனால் அனு பேசவில்லை. மற்றொரு நபர் பேசியுள்ளார்.அவர் கூறியதை கேட்டு ஸ்னிஜோ பேரதிர்ச்சி அடைந்துள்ளார்.

accidentஅவினாசியில் தனியார்  பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.அதில் அனு உட்பட 19 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இந்த தகவலறிந்து உடனடியாக அவினாசிக்கு ஸ்னிஜோ விரைந்துள்ளார். ஒவ்வொரு மருத்துவமனையாக தேடி அலைந்த அவர் இறுதியாக அனுவின் சடலத்தை கண்டுபிடித்து கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.