மீண்டும் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!.. புயலாக வலுப்பெறுமா?!: வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்..!

மீண்டும் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!.. புயலாக வலுப்பெறுமா?!: வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்..!



 new low pressure area has formed in the Southeast Bay of Bengal this morning

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த வாரம் புயலாக தீவிரமடைந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த வாரம் புயல் கரையை கடந்த போதும், அந்த புயலால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக தற்போது வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது வரை மழை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், மாண்டஸ் புயல் உருவான அதே பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 17ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக தீவிரமடையுமா அல்லது வலுவிழக்குமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.