தமிழகம்

ஆசை ஆசையாக கட்டிய வாழ்நாள் கனவு வீடு! திடீரென பற்றி எரிந்த தீ.! 5 பேர் பரிதாப பலி!

Summary:

new hous fired. five people died

சேலம் மாவட்டம் குரங்குச்சாவடி அருகே பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள நரசோதிப்பட்டி ராமசாமி நகரில் வசித்து வருபவர் அன்பழகன், சகோதரன் கார்த்தி இவர்கள் மர அரவை மில் நடத்தி வருகின்றனர். அன்பழகன் தனது தம்பி கார்த்தியின் குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இவர்கள் சமீபத்தில்தான் புது வீடு ஒன்று கட்டி அதில் குடியேறியுள்ளனர். இந்தநிலையில், நேற்றிரவு வழக்கம்போல் இரவு உணவை முடித்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரும், அவரவரின் அறைகளில் உறங்கச் சென்றுவிட்டனர். அப்போது நள்ளிரவில் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்துச் சிதறும் சத்தம் கேட்டு அலறி எழுந்த அக்கம்பக்கத்தினர், கார்த்திக்கின் வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அலறல் சத்தம் போட்டுள்ளனர்.

அந்த வீட்டில் கீழே உள்ள அறையில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களில் அன்பழகன் மட்டும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் வீட்டில் தூங்கிய அன்பழகனின் மனைவி புஷ்பா, கார்த்தி, அவருடைய மனைவி மகேஸ்வரி இவர்களின் குழந்தைகள் இருவர் ஆகிய 5 பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் நேரில் சென்று ஆய்வு ‌மேற்கொண்‌டனர். மின் கசிவால் தீ விபத்து நேர்ந்ததாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Advertisement