தமிழகம் Covid-19

கொத்துக்கொத்தாக எகிறும் பாதிப்பு! கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து கடலூர் திரும்பிய மேலும் 8 பேருக்கு கொரோனா!

Summary:

new corono positive from koyembedu market

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றி விட்டு சொந்த ஊரான கடலூருக்கு திரும்பிய மேலும் 8 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று மற்றும் 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் மிகப்பெரிய காய்கறி மற்றும் பழங்கள் கொள்முதல் செய்யப்படும் கோயம்பேடு மார்க்கட்டில் இருந்த பலருக்கு கொரோனா உறுதியாகி வருகிறது.

Why can't civic body take over Koyambedu market?

ஏற்கனவே அங்கு வியாபாரம் செய்த வியாபாரிகள், போலீஸ்காரர், சலூன் கடைக்காரர், மார்க்கெட்டிலிருந்து பூ வாங்கி வியாபாரம் செய்தவர்கள் என நாளுக்குநாள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. 

கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய 700 பேர் சில நாட்களுக்கு முன்பு தங்களது சொந்த ஊரான கடலூருக்கு வந்துள்ளனர். இவர்களை அடையாளம் கண்டறிந்து சோதனை செய்ததில் ஏற்கனவே 7 பேருக்கு கொரோனா உறுதியானது. நேற்று மீண்டும் 8 பேருக்கு கொரோனா பாதித்து உறுதியாகியுள்ளது.


Advertisement