தமிழகம்

கலைஞருக்கு பிரம்மாண்டமாக உருவாகி வரும் வெண்கல சிலை முதல்முறை வெளியான புகைப்படம்!

Summary:

New bronze statue of kalaignar

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் மற்றும் முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு வெண்கல சிலை உருவாக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகிறது.

கலைஞர் கருணாநிதி சென்ற வருடம் ஆகஸ்ட் 7ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் புதைக்கப்பட்டுள்ளது. இறந்த பிறகு அவரது சிலையானது அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டது.

இந்த வருடம் வரவிருக்கும் கலைஞரின் முதலாவது நினைவு தினத்தன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரது வெண்கலச் சிலை திறக்கப்பட உள்ளது. இதற்காக, 5.2 அடி உயரத்தில் திறக்கப்பட உள்ள இந்த சிலையை வடிக்கும் பணி, சிற்பி தீனதயாளனால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிலை வடிவமைப்பு பணியை மேற்பார்வையிட திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று சென்று இருந்தார். அப்போது சிலையினை பார்வையிட்ட அவர் ஒரு சில திருத்தங்களையும் தெரிவித்துள்ளார்.


Advertisement