சூனியம் வைத்தாக நினைத்து பூசாரி கொலை... கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்.!

சூனியம் வைத்தாக நினைத்து பூசாரி கொலை... கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்.!



near-thindivanam-a-priest-was-killed-due-to-an-issue-ov

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பூசாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில்  மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினரின் நடவடிக்கையை விழுப்புரம் டிஎஸ்பி பாராட்டினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சின்ன நெற்குணம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். 60 வயதான இவர் பூசாரிக இருந்து வந்தார். மேலும் சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பங்க் ஒன்றும் நடத்தி வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு தனது கடையை அடைத்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த மறுமண நபர்கள் சராமாறியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காமராஜர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

tamilnadu

அச்சம்பவ தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காமராஜர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியதில்  ரமேஷ் என்ற நபர் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அவரை கைது செய்து விசாரித்ததில் கூலிப்படையை ஏவி  கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

tamilnadu

மாந்திரீகம் செய்வது தொடர்பாக ரமேஷ் மற்றும் காமராஜ் இடையே போட்டி நிலவி வந்திருக்கிறது. நிலையில் காமராஜ் சூனியம் செய்ததால் தான் தனக்கு திருமணமாகாமல்  குடும்பம் சீரழிந்ததாக அடிக்கடி காமராஜிடம் தகராறு செய்திருக்கிறார்.  இந்த நாள் காமராஜரை கொலை செய்ய முடிவு செய்த அவர் தினேஷ்குமார் மற்றும் சரத்குமார் என்ற இரண்டு கூலிப்படையினரின் மூலம்  காமராஜர் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. என்னைத் தொடர்ந்து காவல்துறையினர் ரமேஷ் , சரத்குமார் மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.