BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
குடிபோதையில் வீடுமாறிப்போச்சு; பாலியல் தொழிலாளியின் வீடுகேட்டு சென்றவருக்கு தர்ம அடி.!
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சதிஷ் குமார் (வயது 35). இவர் அவ்வப்போது வேலை விஷயமாக கரூருக்கு வந்து சென்றுள்ளார். அச்சமயம் பாலியல் தொழிலாளி ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
அவருடன் அவ்வப்போது செல்போனில் பேசி வந்தவர், சம்பவத்தன்று பெண் கூறிய அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். போதையில் இருந்த சதிஷ் வீடு மாறி சென்றதாக தெரியவருகிறது.
இதனால் அங்குள்ள ஒருவீட்டின் கதவை தட்டி, தன்னிடம் இருந்த ரூ.1000 பணத்தை கையில் எடுத்து வைத்தவாறு, பாலியல் தொழிலாளியின் வீடு தானே இது, உள்ளே வரவா? என கேட்டுள்ளார்.
அதிர்ந்துபோன பெண்மணி அலறவே, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் சதீஷை அடித்து நொறுக்கினர். பின் கரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சதீஷை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும், வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.