பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திவாகர் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி...
முதல் ஆண்டு மாணவர்களை வரவேற்க பேனர் கட்டிய இளைஞர் பள்ளி வளாகத்திலேயே மரணம்; தவறி விழுந்து பரிதாபம்.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் தனியார் பாலிடெக்னீக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் மதுரை வீரன். இவர் முதல் ஆண்டு மாணவர்களை வரவேற்க, மூன்றாவது மாடியில் பேனர் கட்டும் வேலையை செய்துள்ளார்.
அப்போது, கால் இடறி அவர் தவறி விழுந்ததில், பள்ளியின் வளாகத்திலேயே மதுரை வீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மதுரை வீரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.