தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு பரபரப்பு..!! வேட்பாளர் கொடுத்த மனுவை பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர்..

தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு பரபரப்பு..!! வேட்பாளர் கொடுத்த மனுவை பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர்..


Namakkal independent candidate ask bank loan for give money to voters

ஓட்டுக்கு பணம் கொடுக்க லோன் கேட்டு மனு கொடுத்த வேட்பாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்தமாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடித்து திமுக, அதிமுக ஆகிய ப்ரதானா காட்சிகள் தொடங்கி சுயேச்சை வேட்பாளர்கள் வரை அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் தான் வாக்காளர்களுக்கு ஊக்க தொகை வழங்க வேண்டும் எனவும், அதற்காக தனக்கு 46 கோடி ரூபாய் கடன் வேண்டும் எனவும் வேட்பாளர் ஒருவர் ஸ்டேட் பேங்கில் கொடுத்த மனு ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். கிரிக்கெட் பேட் சின்னம் அவருக்கு வாங்கப்பட்டுள்ளநிலையில், நேற்று அவர் காந்தி வேடம் அணிந்து, கையில் கிரிக்கெட் பேட், தலையில் ஹெல்மெட்டுடன் நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சென்று வங்கி மேலாளரிடம் மனு ஒன்றை அளித்தார்.

TN Election 2021

அந்த மனுவை வாங்கி படித்து பார்த்த அதிகாரி சற்று அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய்விட்டார். ஆம், அந்த மனுவில், "விஜய் மல்லையா போன்றோரின் 68 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை எஸ்.பி.ஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல், நாமக்கல் தொகுதியில் உள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையிலும், அனைத்து வாக்காளர்களுக்கு ஊக்க தொகையாக 2 ஆயிரம் வழங்க, நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமக்கு வெறும் 46 கோடி ரூபாய் மானியத்துடன் லோன் தரவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த கடன் தொகையை தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வழங்கவேண்டும் எனவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்". முழுவதையும் படித்து முடித்துவிட்டு, அதிர்ச்சியில் இருந்து மீண்டுவந்த வாங்கி மேலாளர், உயர் அதிகாரிகளுடன் பேசி ஆலோசித்து, மனுவை பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, வங்கியில் கடன் கேட்ட வேட்பாளரால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.