6 பேருடன் உல்லாசம், எஸ்கேப்.. 7-வது திருமணம் செய்ய முயன்ற பெண் உட்பட போலி திருமண கும்பல் கைது.!

6 பேருடன் உல்லாசம், எஸ்கேப்.. 7-வது திருமணம் செய்ய முயன்ற பெண் உட்பட போலி திருமண கும்பல் கைது.!


namakkal-girl-and-team-arrested-by-police

ஏழாவதாக திருமணம் செய்ய முயற்சித்த பெண், மோசடி தரகர் உட்பட 4 பேருடன் கைது செய்யப்பட்டார். 

நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் தனபால் என்பவருக்கும், மதுரை மாவட்டத்தைச் சார்ந்த சந்தியா என்பவருக்கும் பாலமுருகன் என்ற தரகர் மூலமாக கடந்த 7 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் பெண் வீட்டார் சார்பாக பெண்ணின் அக்கா, மாமா இருவரும் கலந்து கொண்டனர்.

பின்னர் 9-ம் தேதி பீரோவில் வைத்திருந்த பட்டுப்புடவை மற்றும் நகைகளுடன் சந்தியா மாயமாகவே தனபால் மனைவியை காணாது தேடி வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கு சந்தியாவின் புகைப்படம் பெண் வரனாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த தகவலை அறிந்த தனபால் அவர்களிடம் உண்மையை எடுத்து கூறி, சந்தியா மற்றும் அவரின் தரப்பு ஆட்களை திருமணம் செய்ய திருச்செங்கோட்டுக்கு வரவழைத்துள்ளனர். திருச்செங்கோடுக்கு வந்த சந்தியா மற்றும் தரகர் உட்பட 4 பேரை சுற்றிவளைத்த தனபால், அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். 

விசாரணையில், சந்தியாவுக்கு இதற்கு முன்னதாக தனபால் உட்பட 6 பேருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் இலட்ச கணக்கில் பணம் மற்றும் நகைகளை சுட்டுக்கொண்டு 2 நாட்களில் சந்தியா தப்பி செல்வது வாடிக்கையாகியுள்ளது. சந்தியா, தரகர் பாலமுருகன் உட்பட 4 பேர் கும்பலை கைது செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.