சட்டவிரோத பட்டாசு விற்பனை; குடோன் வெடித்து சிதறியதால் உரிமையாளர் உட்பட 4 பேர் பலி., 7 பேர் படுகாயம்..! நாமக்கல்லில் சோகம்..!

சட்டவிரோத பட்டாசு விற்பனை; குடோன் வெடித்து சிதறியதால் உரிமையாளர் உட்பட 4 பேர் பலி., 7 பேர் படுகாயம்..! நாமக்கல்லில் சோகம்..!


Namakkal Fire Crackers Goodes Down Explosion

 

விற்பனைக்காக வாங்கி வைக்கப்பட்டு இருந்த பட்டாசு குடோன் வெடித்து சிதறியதால் 4 பேர் பலியாகினர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரை சேர்ந்தவர் தில்லைக்குமார். இவருக்கு சொந்தமான குடோனில் சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக தெரியவருகிறது. 

இந்த நிலையில், இன்று குடோன் உரிமையாளர் தில்லைக்குமார் குடோனில் 3 பேருடன் இருக்கும்போது திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தில்லைக்குமார் உட்பட 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

namakkal

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தோர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

பட்டாசு விபத்து சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அங்குள்ள 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.