தனக்கான கல்லறையை இறப்பதுற்கு முன்பே கட்டிவைத்துள்ள நடிகர் ராஜேஷ்! காரணம் என்ன தெரியுமா?
உடல்நலக்குறைவால் தொடர் அவதி.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவால் சோகம்.!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் வேட்டைக்காரனிருப்பு, வானவன்மகாதேவி கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ் கண்ணன். இவரின் மனைவி பிரியா (வயது 26). இந்த தம்பதிக்கு கடந்த 4 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
தம்பதிகளின் மகிழ்ச்சி வாழ்க்கைக்கு அடையாளமாக ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில், உடல்நலக்குறைவால் பிரியா அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மருந்து மற்றும் மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டுள்ளார். தனது உடல்நிலை குறித்து மனமுடைந்து காணப்பட்ட பிரியா, நேற்று தற்கொலை செய்யும் விபரீத முடிவெடுத்துள்ளார்.
வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பிரியாவை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள தலைஞாயிறு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ தனி விசாரணையும் நடந்து வருகிறது.