தமிழகத்திற்குள் நுழைந்த சீன உளவாளிகள்?.. மர்மமாக கரையொதுங்கிய சீன ரப்பர் படகு.. அதிர்ச்சி தகவல்.!Nagapattinam Vedharanyam Chinese Spy Mystery Boat

வேதாரண்யம் அருகே கரையொதுங்கிய சீன ரப்பர் படகுகளின் காரணமாக சீன உளவாளிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளாரா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், கோடியக்காடு முணாங்காடு பகுதியில் சீன நாட்டில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு கரையொதுங்கி இருந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி கயல்விழி, மாவட்ட எஸ்.பி-கள் நாகப்பட்டினம் ஜவஹர், திருவாரூர் சுரேஷ்குமார் உட்பட கடலோர காவல் துறையினரும் நேரில் சென்று ரப்பர் படகை பார்வையிட்டனர். 

இந்த ரப்பர் படகில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வாய்ப்புள்ளது. படகு 13 அடி நீளம், 3 அடி அகலம் கொண்டது. துடுப்பை பயன்படுத்தி கரைசேரும் அளவில் இருந்த படகில் ஒன்றரை லிட்டர் அளவுள்ள இலங்கை தண்ணீர் பாட்டில்கள் 16 மற்றும் 4 பாதுகாப்பு உடைகள், ஒருஜோடி காலனி, கண்ணாடி போன்றவை இருந்துள்ளது. 

இதனால் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்ட்டதில், அது காட்டுப்பகுதி அருகே வரை சென்று நின்றது. காட்டுப்பகுதி டிரோன் கேமரா மூலமாக காவல் துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படகு சீனாவில் தயார் செய்யபட்டுள்ளது. 

படகில் யாரேனும் வந்துள்ளனரா? அல்லது படகு மட்டும் வந்துள்ளதா?, படகில் யாரேனும் வந்திருந்தால் அவர்கள் இலங்கையில் இருந்து தப்பி வந்த ஈழத் தமிழர்களா? சீன உளவாளிகளா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. 

முன்னதாக, உளவுத்துறை அதிகாரிகள் தமிழக எல்லைப்பகுதி வழியே சீன உளவாளிகள் 5 பேர் கடல்வழியில் ஊடுருவலாம் என்று எச்சரிக்கை விடுத்த நிலையில், சீன ரப்பர் படகு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.