மாடு மோதி, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கோர மரணம்: சாலையோரம் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்.!

மாடு மோதி, பேருந்தின் சக்கரத்தில் சிக்கி கோர மரணம்: சாலையோரம் நடந்து சென்றவருக்கு நேர்ந்த சோகம்.!


Nagapattinam Man Died Accident 

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டைவாசல் பகுதியில் வசித்து வருபவர் சபரிராஜன் (வயது 55). இவர் கூலித்தொழிலாளி ஆவார். 

சம்பவத்தன்று, மேல்கோட்டைவாசல் பெட்ரோல் பங்க் அருகில் நடந்து சென்றபோது, சாலையில் வந்த மாடு அவரை முட்டியுள்ளது. 

இதனால் சாலையில் நிலைதடுமாறி விழுந்தவர், திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணித்த அரசுப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கினார். 

இந்த விபத்தில் சபரிராஜன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த நாகப்பட்டினம் நகர காவல் துறையினர், சபரிராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.