தமிழகம்

300 மீட்டர் ஓடிய திருடனை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்.. விடிய விடிய காவல்காத்த தரமான சம்பவம்.!

Summary:

300 மீட்டர் ஓடிய திருடனை விரட்டிப்பிடித்த பொதுமக்கள்.. விடிய விடிய காவல்காத்த தரமான சம்பவம்.!

300 மீட்டர் தப்பியோடிய திருடனை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து, காவல்துறையினரிடம் விடிய விடிய காத்திருந்து ஒப்படைத்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை அடுத்த தெற்குபொய்கை நல்லூர் தெற்குதெரு பகுதியில் வசித்து வருபவர் தமிழ்செல்வம். இவரது வீட்டிற்கு சுமார் 10 மணியளவில் நேற்றிரவு அரை டவுசர் போட்டுக்கொண்டு ஒரு மர்மநபர் சென்றுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை நோட்டமிட்ட நிலையில், சிக்கிவிடுவோமோ என எண்ணி அங்கிருந்து மர்மநபர் ஓட தொடங்கியுள்ளார். சுமார் 300 மீட்டர் தூரம் அங்குமிங்கும் விழுந்து விழுந்து ஓடிய திருடனை, மடக்கிப் பிடித்து கிராம மக்கள் தென்னை மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

மேலும், அவரிடம் பல கேள்விகளை எழுப்பிய போது அவர் சென்னையை சேர்ந்த வினோத்ராஜ் என்றும், முன்பே அதே பகுதியில் காணாமல் போன கணேசன் என்பவரது இருசக்கர வாகனத்தை தான் திருடியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இன்றும் திருடும் எண்ணத்தில் அவர் வந்தது தெரியவந்துள்ளது.இதனை தொடர்ந்து வேளாங்கண்ணி காவல்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்த நிலையில், இரவு நேரங்களில் கைதிகளை காவல் நிலையத்தில் வைத்திருக்க இயலாத காரணத்தினால், ஊர் பொதுமக்கள் திருடனை விடிய விடிய காவல் காத்து காவல் நிலையத்தில் சென்று ஒப்படைத்துள்ளனர். 

பின் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் சகஜமாக திருடன் ஒருவன் கிராமத்திற்குள் வந்து சென்றதால் அப்பதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement