நாகப்பாம்பிடமிருந்து தனது குஞ்சுகளை காப்பாற்ற போராடும் தாய் கோழி.! கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா? பதைபதைக்கும் வைரல் வீடியோ..! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

நாகப்பாம்பிடமிருந்து தனது குஞ்சுகளை காப்பாற்ற போராடும் தாய் கோழி.! கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா? பதைபதைக்கும் வைரல் வீடியோ..!

ஒரு சிறிய அறைக்குள் கோழியானது தனது குஞ்சுகளுடன் இருந்த நிலையில் உள்ளே வந்த நாகப்பாம்பு கோழி குஞ்சுகளை தாக்க முயன்றுள்ளது. உடனே தாய் கோழியானது தனது விடா முயற்சியால் குஞ்சுகளை காப்பாற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பிட்ட வீடியோவில் ஒரு சிறிய அறைக்குள் தாய் கோழி தனது குஞ்சுகளுடன் நிற்க திடீரென உள்ளே நுழைந்த நாகப்பாம்பு ஒன்று தாக்க வந்துள்ளது. அதனை தாய் கோழியானது கொத்தி துரத்துகிறது. ஆனால் மீண்டும் அந்த நாகப்பாம்பு விடாமல் குஞ்சுகளை தாக்க வந்துள்ளது.

அதனை அடுத்து தாய் கோழியானது தனது விடாமுயற்சியாலும், தைரியத்தாலும் பாம்பிடமிருந்து தனது குஞ்சுகளை காப்பாற்றிய வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தனது குஞ்சுகளை காக்கும் தைரியமான அம்மா என பதிவிட்டு வீடியோவை வைரலாகி வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo