உறங்கிக் கொண்டிருந்த குழந்தை கடத்தல்... மர்ம நபர்களை தேடும் போலீஸ்.!!



mysterious-kidnapping-young-girl-baby-abducted-from-hom

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே அமைந்துள்ள கோணவாய்க்கால் கிராமம், சேலம் - கொச்சின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் வெளி மாநில குடும்பத்தை சேர்த்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட வெங்கடேஷ், கீர்த்தனா தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி வெங்கடேஷ் தனது மனைவி பிள்ளைகளுடன் கொசுவலை விரித்து தூங்கிக் கொண்டிருந்தார்.  கண்விழித்து பார்க்கும் போது தங்களுடைய ஒன்றை வயது பெண் குழந்தை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ந்து போன அவர்கள் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். குழந்தை படுப்பதற்காக போடப்பட்ட கொசு வலை காலையில் கிழிந்துள்ளது. எனவே மர்ம நபர்கள் யாரோ குழந்தையை கடத்திச் சென்றிருக்க வேண்டுமென நினைத்தனர். 

tamilnadu

இது குறித்து சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் குழந்தையை மீட்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது மேம்பாலத்தின் கீழ் பகுதி என்பதால் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. எனவே சற்று தொலைவில் இருக்கும் சிசிடிவி ஆதாரங்களை தேடி வருகின்றனர். அது மட்டுமின்றி இது நெடுஞ்சாலை பகுதி என்பதால் ஏராளமான வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளது. ஏதேனும் ஒரு வாகனத்தை நிறுத்தி குழந்தையை கடத்தியவர்கள் தூக்கி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: காதலனுடன் ஓடிய மனைவி... 5 வயது சிறுவன் அடித்து கொலை.!! டெம்போ டிரைவர் வெறி செயல்.!!

இதன்படி முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் அந்த பகுதி வழியாக வந்த 3 மர்ம நபர்கள் பெண் குழந்தையை கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது. அந்த மர்ம நபர்கள் சிசிடிவி காட்சியில் தெரிய வருகிறார்களா.? என போலீசார் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட குழந்தையை கண்டிப்பாக மீட்டுத் தருவோம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை... அர்ச்சகர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!